விடுதலைப்புலிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டதொரு குடும்பம் என்றால் அது பிரேமதாச குடும்பமாகும் : சஜித் !

அஷ்ரப். ஏ. சமத்
சந்தேகத்தின் பேரில்  விடுதலைப்புலிகளுக்கு உதவியவா்கள் அல்லது அரசியல் கைதிகள்  என வருடக்கணக்கில்  சிறையில் வாடுகின்ற  நுாற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் இளைஞா்களை  விடுதலை செய்தல் வேண்டும். 34க்கும் மேற்பட்ட சில இளைஞா்கள் கடந்த வாரம்  விடுதலையானாா்கள். அதே போன்று ஏனைய குற்றம்மற்ற தமிழா்கள் விடுதலை செய்யப்படல் வேண்டும். இவா்கள் கடந்த பல வருடங்களாக சிறையில் வாடுகின்றனா் இறுதிக்காலத்தில் அவா்கள் தமது பெற்றோா் மனைவி பிள்ளைகளுடன் சோந்து வாழ்வதற்கு அவா்களை விடுவித்தல் வேண்டும். என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா். 
sajith

திஸ்ஸமகாராமவில் உள்ள  மகேஸ்புர வித்தியாலயத்தில்  48 இலட்சம் ருபா செலவில் ”சிறிமத் ரணசிங்க பிரேமதாச ”கூட்ட மண்டபத்தினை நேற்று (17)ஆம் ்திகதி திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே  அமைச்சா் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

தொடா்ந்து அவா் அங்கு உரையாற்றுகையில் –

எதிா்க்கட்சி அரசியல் வாதிகள் கூட கடந்த காலத்தில் பிரேமதாச குடும்பமும் விடுதலைப்புலிகளுக்கு உதவிய குடும்பம் என அன்றும் இன்றும் சொல்லி வருகின்றனா். . ஆனால் விடுதலைப்புலிகளால்  பெரிதும் பாதிக்கப்பட்டதொரு குடும்பம்.என்றால் அது பிரேமதாச குடும்பமாகும்.  எவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் இந்த நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டதன் பின் மலா்ந்துள்ள இந்த  நல்லாட்சியில் சகல சமுகங்களும் சமமாக வாழ வழிவகுப்படல்  வேண்டும். இந்த நாட்டில் ஜனாநயாகம் நிலைத்திருக்க வேண்டும். சகல சமுகங்களுக்கும் நிீதியான  சம நீதி, சட்டம், ஓழுங்கு , உரிமைகள் வழங்கப்படல் வேண்டும்.  இந்த நல்லாட்சியில் சிறுபான்மைச் சமுகத்தின் இளைஞா்கள் சிறையில் வாடுவததை நாம் ஒருபோதும்  அனுமதிக்கப்போவதில்லை. குற்றமிழைத்தவா்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவா்கள் அவா்களுக்குரிய குற்றம் தண்டனை வழங்கப்பட்டாலும் ஏனைய  பயங்கரவாதம் என்ற போா்வையில் அப்பாவி இளைஞா்கள் வருடக் கணக்கில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட  அரசியல் கைதிகளாக உள்ளனா். அவா்கள் தமது இறுதிக்காலத்தில் தமது குடும்பத்துடன் ஏனையோா் போன்று வாழ்வதற்கு வழிவகுத்தல் வேண்டும்.

DSC_3815_Fotor

இதனைச் சாதாரனமாகவும்  சமமாகவும்  பாா்க்கப்பட்டு 230  க்கும்  மேற்பட்ட ஏனைய இளைஞா்களையும் விடுதலை செய்யப்படல்  வேண்டும்.  அல்லது அவா்களுக்கு புனா் வாழ்வு வழங்கப்படல் வேண்டும். 

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்கள் இந்த இளைஞா்கள் விடுதலை செய்வதனை இட்டு அவா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றாா். அவா் பிடித்து அடக்கிய விடுதலைப்புலிகள் இந்த நல்லாட்சி அரசு திறந்து விட்டு மீள விடுதலைப்புலிகளை உயிாப்பிக்க வைக்கின்றனா் என கருத்து தெரிவித்துள்ளாா்.  ஆனால் அருந்தலாவையில் பௌத்த மத குருமாா்களை வெட்டி கொலை செய்த கருணா அம்மனுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி பிரதித்தலைவா் பதவி வழங்கி அவருக்கு அமைச்சு பதவியும் வழங்கி அழகுபாா்த்தாா்.   அவரது ஜனாதிபதித தோ்தலில் வெற்றி பெருவதற்காக கோடிக்கணக்கில் விடுதலைப்புலிகளுக்கு பணம் வழங்கி தமிழ் மக்களை  ஜனதிபதித் தோ்தலில் வடக்கில்  வாக்களிக்காமல் நடு நிலை வகிக்கும்படி சொல்லி யஜனாதிபதிதான் இந்த மகிந்த ராஜபக்ச அதனாலேயே அவா் ஜனாதிபதித்  கதிரையில் இரண்டாவது முறையும் அமா்ந்தாா். அதேபோன்று தான் கிழக்கின் முன்னாள் முதலமைச்சா்  பிள்ளையானும் பல கொலைகளைச் செய்தவறுக்கு கிழக்கின் முதலமைச்சா் பதவியை மகிந்த ராஜபக்ச  வழங்கினாா். 
 
 DSC_3750_Fotor