சர்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி ….

DSC00048_Fotor

எம்.சி.அன்சார் 

 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட மூலத்தை மூன்றிரெண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றியதனையடுத்து நாட்டில் சர்வாதிகாரம் நிறைந்த ஆட்சி முறையை 37 வருடங்களுக்கு பின்னர் முடிவுக்குக் கொண்டு வந்துள்ள அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சியானது நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைபெற செய்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயரை நிலைநாட்டவும் செய்துள்ளது.

 என ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதான அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட மூலம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதையடுத்து அவர் ஊடகங்களுக்கு விடத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்- மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எதிரணியின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானது 19ஆவது திருத்தத் சட்ட மூலமாகும். இதனை எவ்வாறாயினும் நிறைவேற்ற வேண்டும் என்பதில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சியானது பாராட்டத்தக்கதாகும்.

நிறைவேற்று அதிகாரம் என்பதன் போர்வையில் ஜனாதிபதியிடம் குவிந்திருக்கும் எல்லையற்ற அதிகாரங்கள் உண்மையிலேயே ஜனநாயகப் பண்புகளுக்கு ஏற்புடையதல்ல. 1977 ஆண்டுத் தேர்தலில் வென்றெடுத்த பெரும்பான்மை ஆசனங்களைப் பலமாக வைத்துக் கொண்டு 1978இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் இறுக மூடிக்கொண்ட ஜனநாயகக் கதவின் தாழ்ப்பாளை கடந்த 37 வருடங்களாக எந்தவொரு ஜனாதிபதியினாலுமே திறக்க முடியவில்லை.

நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை நீக்கப் போவதாக ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சித் தலைவர்கள் கோஷமிட்டனர்கள். முன்னாள் ஜனாதிபதிகளான ஆர். பிரேமதாச, (1994, 1999) சந்திரிகா குமாரதுங்க மற்றும்  (2005, 2010) மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தனது தேர்தல் பிரசாரங்களில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வோம் எனக்கூறியிருந்தும் அதனை நடைமுறைப்படுத்த அவர்கள் தவறிவிட்டனர்கள். அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கும் ஒருபடி மேல் சென்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைறை மேலும் பலப்படுத்தும் வகையில் 18ஆவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றியிருந்தார். இது நாட்டில் சர்வாதிகார ஆட்சி நிலவ வழிவகுத்தது.

இவ்வாறான அரசியல் வரலாற்றுப் பாதையில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு முன்வந்த முதலாவது ஜனாதிபதியாகவும் உலகத் தலைவர்களுக்கு முன்உதாரணமாகவும் மைத்திரிபால சிறிசேன விளங்குகிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசாங்கமானது கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டு 19வது திருத்தச்சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதில் வெற்றியும் கண்டது. இது நாட்டு மக்களுக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும்  கிடைத்த வெற்றியாகும்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்ட மூலமானது எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இச்சட்ட மூலம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதையடுத்து அதன் அமோக வெற்றியின் மூலம் நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வழிவகுக்கும் எவ்வித சந்தேகமில்லை.  இதற்கு ஆதரவளித்த கட்சித்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.