அபு அலா
சென் யூடி ஹோம் நேசிங் நிறுவனத்தின் முதலாவது தாதியர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) சாந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.
சென் யூடி ஹோம் நேசிங் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ.ஏ.வாஹிட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிறுவனத்தின் முதலாவது தாதியர்களுக்கான கற்கை நெறியினை இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்து வெளியாகும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 80 முஸ்லிம், தமிழ் இளைஞர், யுவதிகள் இந்த தாதியர் பட்டங்களைப் பெற்று வெளியாகினர்.
இந்த பட்டமளிப்புக்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர்கள் வழங்கி வைத்தனர்.
இதன்போது இந்நிறுவனத்தின் பணிப்பாளர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர்களுக்கு இந்நிகழ்வின் பிரதம அதிதி ஞாபகார்த்த சின்னங்களை வழங்கிவைத்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கான ஞாபகச் சின்னத்தை நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ.ஏ.வாஹிட் வழங்கி கௌரவித்தார்.