மட்டு.மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை மலைபோல் உயர்வு!

ஜவ்பர்கான்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழைகாரணமாக மரக்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் மலையளவு அதிகரித்துள்ளன.

 

150 ரூபாயாக விற்பனை செயய்யப்பட்ட 1 கிலோ பச்சைமிளகாய் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையான உளளுர் மரக்கறிகள் 600 முதல் 700 வரை விற்பனையாகிறது.

 

தம்புள்ள மற்;றும் நுவரெலியா போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளின் விலையும கிலோ ஒன்றிற்கு 200 முதல் 300 வரை அதிகரித்துள்ளது.
இம் மாவட்டத்தில் உள்ளுர் மரக்கறி உற்பத்தி செய்யப்படு;ம் இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெருமளவு மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளன.இதனாலேயே இந்நிiலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.