பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும்…!

 

எஸ்.அஷ்ரப்கான்

இலங்கையின் யுத்த வடுக்களால் பாதிக்கப்பட்ட ஈரின (முஸ்லிம், தமிழ்) சமூகங்களுக்கு உரிய நீதி வழங்கப்படுவதற்காக எமது ஈரின சமூகமும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த ஒற்றுமை மூலமே பேரினவாத சக்திகளிடமிருந்து தமிழ் பேசும் சமூகங்களும் சமமான அந்தஸ்துடன் வாழ வேண்டியவர்களே என்ற சிந்தனையை ஓங்கி ஒலிக்கச் செய்ய முடியும்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அரசாங்கமானது சிங்களசமூகத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்துக்களையே முன்வைக்கிறது. இலங்கைமீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையானது நான்கு தீர்மானங்களைநிறைவேற்றியுள்ளது. 

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நான்கு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,  இலங்கையில் குற்றம்இழைத்தவர்கள் மீதான விசாரணையில் அனைத்துலக நீதிபதிகளை உள்வாங்குதல் தொடர்பில் ‘சமரசஉடன்பாடு’ ஒன்று எட்டப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் அரசாங்கத்தால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட,ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைக்கான பதிலாகவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போரிலிருந்து மீண்டெழுந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர்இலங்கையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஐ.நா விசாரணையாளர்களிடம் தமது சாட்சியங்களைப்பதிவு செய்தனர். இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் இவர்கள் தமது சாட்சியங்களைவழங்கினர். இவ்வாறான சாட்சியங்களுடன் ஐ.நா வால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்இலங்கையில் இடம்பெற்ற சட்ட ரீதியற்ற படுகொலைகள், காணாமற்போதல்கள், பலவந்தமான கைதுகள்,சித்திரவதைகள், பாலியல் ஊடான வன்முறைகள்,  போர் வலயங்களிலிருந்து தப்பிக்க முயற்சித்த மக்கள்தடுக்கப்பட்டமை, பொதுமக்கள்,  பொது மதஸ்தலங்கள் மீதான  தாக்குதல்கள் போன்றனஉள்ளடக்கப்பட்டுள்ளன. 

இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு இழைக்கப்பட்ட குற்றங்கள் எனவும், இவை சட்டத்தின் முன்நிரூபிக்கப்பட்டால் இவை மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் எனதீர்ப்பளிக்கப்பட்டு இவற்றைப் புரிந்த இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ்ப் புலிகளுக்கு எதிராக தண்டனைவழங்கப்பட முடியும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரணைசெய்வதற்கான தகைமையை இலங்கையின் சட்ட மற்றும் நீதிச் சேவைகள் கொண்டிருக்கவில்லை எனவும்,இதனாலேயே இவ்வாறான குற்றங்கள் தொடர்ந்தும் இலங்கையில் இடம்பெறுவதாகவும் ஐ.நா அறிக்கையில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைத்துலக நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் இலங்கை நீதித்துறையுடன்இணைந்து ‘கலப்பு நீதிமன்றம்’ என்ற பொறிமுறையில் இவ்வாறான குற்றங்களை விசாரணை செய்யவேண்டும்எனவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 19 ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதிவழங்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.  இதேபோன்று இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள்  சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இதுதொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 

இலங்கை அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்ட கலப்பு நீதிப்பொறிமுறையானது அடிப்படையில் நன்மைபயக்கக் கூடியது. ஆனால், அதன் விபரங்கள் தீங்கு விளைவிப்பதாக அமையலாம். இவ்வாறானபொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு யார் எவ்வாறு நியமிக்கப்படுவார்கள்? இவர்களது விஞ்ஞாபனம்மற்றும் அவர்களது செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும்? இவ்வாறான வினாக்களுக்கான பதில்களேதீர்மானம் வெற்றியடைவதற்கும் தோல்வியுறுவதற்கும் முக்கிய காரணிகளாக அமையும். இலங்கைஅரசாங்கமானது அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ள போதிலும், போரால்பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளைஇன்னமும் முன்னெடுக்கவில்லை. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளகுற்றங்களை விசாரணை செய்வது வரவேற்கத்தக்கதே. ஆனாலும் இலங்கை அரசாங்கத்தின் உயர்பதவிகளில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

 

ஆகவே, எவ்வித பாரபட்சமும் பாராது குற்றமிழைத்தவர்கள் எவரேனும் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கைஇராணுவத்தால் இழைக்கப்பட்ட மிக மோசமான மீறல்கள் தொடர்பாக அரசாங்கமானது அமைதிகாக்கிறது. ஏனெனில் பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவேஅரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குநீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அரசாங்கமானது சிங்கள சமூகத்திடமிருந்து தன்னைப்பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்துக்களையே முன்வைக்கிறது. 

இலங்கை அரசாங்கமானது எது சரி, எது பிழை என ஆராய்ந்து, தைரியத்துடன் தனது கோட்பாடுகளைமுன்வைக்கத் தவறியுள்ளது. ஊடகங்கள், சிவில் அமைப்புக்கள், மற்றும் மதத் தலைவர்கள் போன்றோர்அனைத்துலக தலையீட்டுடன் கூடிய நீதி விசாரணைப் பொறிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும் எனவலியுறுத்தும் அதேவேளையில், காணாமற்போனோர், கடத்தப்பட்டோர் தொடர்பாகவும் நாட்டின் உண்மைமற்றும் மீளிணக்கப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போரிலிருந்து தப்பி வாழும்குடும்பத்தினருக்கும் நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய பொறிமுறை தொடர்பில் மிகக் குறைந்தளவிலேயேகவனம் செலுத்துகின்றனர். 

குறிப்பாக தமிழ் பேசும் அரசியல் தலைமைகள் வெறுமனெ தமது இனம் சார்ந்த விடயங்களில் மாத்திரம் ஒரு தலைப்பட்சமாக செயற்படாது ஈரின சமூகங்களுக்கும் குரல் கொடுக்கும் பொறிமுறை ஒன்றினை ஒற்றுமையுடன் செயற்படுத்த முனைய வேண்டும். இவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் நாட்டில் உண்மை, நீதி,பொறுப்புக்கூறல் போன்றவற்றை வலியுறுத்த வேண்டும்.

ஒட்டுமொத்தமாக யுத்தத்தின் கோரத்தால் பின்னோக்கி நகர்ந்த நமது ஈரின சமூகங்களும் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று முன்னோக்கி நகர்ந்து எமது எதிர்கால இளம் தலைமுறையினருக்கு இந்த நாட்டை மீண்டும் யுத்த களமாக கையளிக்காமல் புண்ணிய பூமியாக, சமாதான பூமியாக வழங்கிவைக்க மனைய வேண்டும். இதுவே நாம் எமது பிள்ளைகளுக்கு வழங்கும் மாபெரும் பரிசு ஒன்றாகும்.

நன்றி- சுடர் ஒளி

ashraf khan