மத்திய லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தில் ஆயுதத்துடன் 41 வயது பிரெஞ்சுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சின் பாரிஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்றிரவு அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் 127 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இங்கிலாந்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அதிக அளவில் பயணிகள் வந்து செல்லும் மிகப்பெரிய விமான நிலையமான கேட்விக் விமான நிலையத்தின் வடக்கு முனையத்தில் 41 வயது பிரெஞ்சு ஆண் பயணியிடமிருந்து ஆயுதம் கைப்பற்றப்பட்டதாக சஸ்செக்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி போன்று காட்சியளிக்கும் அந்த ஆயுதம் தடவியல் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், விசாரணைக்கு பிறகே ஆயுதத்தை பற்றிய முழுமையான விபரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வடக்கு முனையம் தற்போது மூடப்பட்டுள்ளது.