எ.அசீர் சமான்
வருடம் தோறும் உலகிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் சிறப்பை மேம்படுத்தும் நோக்குடனேயே தொழிலாளர் தினம் நினைவு கூறப்படுகின்றது. இந்நிலையில் நாமும் சக தொழிலாளர்களும் இன்றைய நாளில் சக தொழிலாளர்களுக்கும், எமது வேலை வழங்குநர்களுக்கும் வாழ்த்துக்களையும் எமது செய்திகளையும் பரிமாறிக்கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றோம் என சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் அன்வர் நௌஷாத் தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எமது தொழிலாளர்கள் தமது வாழ்க்கை முறையின் பண்புகளை வாழ்க்கைக்கு உதவும் வகையிலாக மாற்றிக்கொள்ள வேண்டியுமுள்ளது. தொழிலாளி ஒவ்வொருத்தருக்கும் தமது வீட்டின் எல்லா அங்கத்தவர்களையும், அன்றாட வாழ்க்கை வட்டத்தோடு பங்கு பற்ற வைக்க வேண்டிய தேவையுமுள்ளது. வீட்டின் அங்கத்தவர்களும் தமது நிலை உணர்ந்து சுறுசுறுப்புடனும், அர்ப்பணிப்புடன் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். சுய தேவை நிறைவேறும் அளவுக்காவது நமது வீட்டு வாழ்வும் மாறவேண்டும். இதன் மூலமாக மாத்திரமே நாம் நிலை பேரான பொருளாதார விருத்தியை காண முடியும். தன்னிறைவு பெற முடியும்.
பல அசாதாரண சூழல்களில் இருந்தும் நாமும் எமது நாடும் இன்று சாதாரண வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது. இந்நிலை தொடர வேண்டும், அன்றாட பாவனைப் பொருள்களும், எரிபொருளும் மேலும் விலை குறைக்கப்பட வேண்டும். விசேடமாக தனியாள் சேமிப்பிற்கு எமது உழைப்பாளர் வர்க்கம் முழுதும் முக்கியமளிக்க வேண்டும். இதன் மூலமாக நாம் நமக்கான எதிர்காலத்தை நாம் பொருத்தமானதாகவும், பிரயோசமிக்கதுவுமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இன்றைய நாளில் உறவுகளையும், உடமைகளையும் இழந்து விட்ட தொழிலாளர்களுக்கும், விசேடமாக நேபாளின் தொழிலாளர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்வோம்.