பிரான்ஸிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிய தொலைபேசி இலக்கம்!

 

 

பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆராயப்பட்டு வருவதாக அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் இலங்கையர் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா கூறினார்.

இலங்கைத் தூதரகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரான்ஸ் தலைநகரிலுக்க ஆறு முக்கிய இடங்களில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவற்றில் கால்பந்தாட்டப் போட்டியொன்றை பிரான்ஸ் ஜனாதிபதி பார்த்துக்கொண்டிருந்த மைதானத்திலும் பயங்காரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாவது உலக யுத்த்த்தின் பின்னர் பிரான்ஸில் நாடு முழுவதும் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்ட முலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும், பிரான்ஸின் அனைத்து போக்குவரத்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா கூறினார்.

பிரான்ஸில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்வதற்கு 0033789238926 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.