மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரப் பகுதியில் அடையாளமிடப்பட்ட மனித புதை குழி வழக்கு மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதும் அழைப்பாணை விடுக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மன்றில் சமுகமளித்திருந்தபோதும் ஹர்த்தால் காரணமாக மன்றில் சட்டத்தரணிகள் ஆஐராகாத காரணத்தால் இவ் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றுக்குள்ளும் காணாமல் போனவர்களின் மனித எச்சங்கள் காணப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி வழக்கில் காணாமல் போனவர்களின் சார்பாக ஆஐராகி வரும் சட்டத்தரணிகள் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க குறிப்பிடப்பட்ட கிணறு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் கண்டு பிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்ட்டது.
இதைத் தொடர்ந்து இவ் கிணறு அகழ்வு செய்யும்வரைக்கும் இதனூடாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அத்துடன் இவ் வழக்கு ஏற்கனவே கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசாரால் தொடுக்கப்பட்டிருந்தபோதும் தற்பொழுது இவ் வழக்கு மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பொலிசார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் ஒன்றை மேற்கொண்டதைத் தொடர்ந்து குறிப்பிடப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு மன்றின் ஊடாக மன்றில் ஆஐராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தன.
இதுவிடயமான வழக்கு வெள்ளிக் கிழமை (13 இன்று) மன்னார் நீதவான் ஆ.கி.அலெக்ஸ்ராஐh முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது அழைப்பானை விடுக்கப்பட்ட சகல திணைக்கள அதிகாரிகளும் தவணையின்போது மன்றில் ஆஐராகியிருந்தனர்.
ஆனால் இவ் தவணை தினமாகிய வெள்ளிக் கிழமை மன்னாரில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதால் சட்டத்தரனிகள் எவரும் மன்றில் ஆஐராகாத நிலையுடன் மன்னாரில் தொடர்ந்து அடைமழை பெய்து கொண்டு இருப்பதாலும் சந்தேகத்துக்குள்ளாகி இருக்கும் கிணற்றை அகழ்வு செய்யும் வாய்ப்பு இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவ் வழக்கை 19.02.2016ம் ஆண்டு வரை விசாரனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.