கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மட்டும் விண்வெளியில் 6 புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
விசித்திரங்கள் பல நிறைந்த விண்வெளியில், அறிய முடியாத பல ரகசியங்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் பெரு முயற்சி செய்து வருகின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக விண்வெளியில் பல அரிய கண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் நிகழ்த்துவது விஞ்ஞானிகளுக்கு சாத்தியமாகி வருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும், விண்வெளியில் 6 புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் காட்டி, விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அவையாவன…
* வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளால் அனுப்பப்பட்ட “பீலே’ விண்கலம், “67 பி” எனும் வால் நட்சத்திரத்தில் தரை இறங்கி சாதனை படைத்தது.
* இதன்மூலம், உயிரினங்கள் வாழ ஆதாரமான ஒக்சிஜன் மூலக்கூறுகள் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது.
* கடந்த ஜூலையில், நாசா அனுப்பிய கெப்ளர் விண்கலம், பூமியைப் போன்ற தோற்றம் கொண்ட புதிய கிரகத்தைக் கண்டறிந்தது. இதற்கு “கெப்ளர்- 452பி” எனப் பெயர் சூட்டப்பட்டது.
* பூமியிலிருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியான, அதிகளவு பாறைகள் கொண்ட, “எச்.டி.,219134 பி” எனும் புதிய கிரகத்தை, அதே ஜூலை மாதத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
* செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என நம்புகின்றனர்.
* அக்டோபர் மாதத்தில், புளூட்டோ கிரகத்தில் மிகச் சிறிய அளவில் தண்ணீர் துகள் இருப்பதை, நாசாவின் நியூ ஹொனரசான் விண்கலம் கண்டறிந்தது. பூமியைப் போன்று, அங்கும் வானம் நீலநிறமாகக் காட்சி அளிப்பதும் கண்டறியப்பட்டது.