அவன்ற் கார்ட் நிறுவனத்துடனான அனைத்து உடன்படிக்கைகளையும் இரத்து செய்து கடற்படைக்கு வழங்க தீர்மானம் !

 

அவன்ற் கார்ட் நிறுவனத்துடனான அனைத்து உடன்படிக்கைகளையும் இரத்து செய்து கடற்படைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடந்த 9 ஆம் திகதி இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தரப்புகள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.