sulfikar
அட்டாளைச்சேனை பிரேதேச செயலக பிரிவில் விதவைகளையும் மாற்று திறநாளிகளையும் தலைமையாக கொண்ட குடும்பங்களின் பொருளாதார முனேற்றம் கருதி அவர்கள் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பொருட்டு கிழக்கு மாகான சமூக சேவை திணைக்களம் நிதி உதவி வழங்கி வருகின்றது
இத்திடத்தின் அடிப்படியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு பிரேதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம் .சுல்பிகார் தலமையில் நடை பெற்றது இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா மற்றும் சமூக சேவை அலுவலர் எம். அன்வர்களும் பங்கு பற்றி சிறப்பித்தனர் . மேலும் இந்நிகழ்வில் காட்டு யானைகளினால் சேதமாக்கப்பட்ட சிறிய பயிர் செய்கையாளர்கள் இருவருக்கும் தீ விபத்தில் வீட்டினை இழந்த குடும்பஸ்தர் ஒருவருக்கும் புனருத்தாரணம் செய்யும் பொருட்டு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது .
இவ்வாறான பல்வேறு சேவைகளை கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகபிரிவிலும் நடைமுறை படுத்தி வருவது முக்கிய அம்சமாகும் .