ஆங் சான் சூகி அறுதிப் பெரும்பான்மை பலம் பெறுவார் என எதிர்பார்ப்பு !

மியன்மார் பாராளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகின்றது.

 

Myanmar-News-Headline-Story-Today-Aung-San-Suu-Kyi

இந்நிலையில், திங்கட்கிழமை இரவு 16 இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் 15 இடங்களை ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய முன்னணி கைப்பற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

நாடு முழுவதிலுமான முடிவுகள் தெரிய இன்னும் இரண்டு நாட்களாகும் என்று கூறப்படுகிறது.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய முன்னணி 70 சதவீத இடங்களைப் பெற்று, பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மியன்மார் இராணுவத்தின் ஆதரவுடன் ஆட்சி புரிந்து வந்த யூனியன் சொலிடாரிட்டி கட்சி படுதோல்வியைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.