1400 மில்லி கிராம் கஞ்சாவுடன் காத்தான்குடியில் நால்வர் கைது !

ஜவ்பர்கான்

DSC05286_Fotor
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடியில் 1400 மில்லி கிராம் கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மகேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றிரவு பொலிஸார் நடாத்திய தேடுதலின்போது குறித்த கஞ்சாவை வைத்திருந்த நிலையில் மேற்படி நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DSC05289_Fotor

கைது செய்யப்பட்டவர்கள் இன்று மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.