இளைஞர் பாராளமன்ற தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் சந்தர்ப்பம் வேண்டும் என்கிறார் அப்துல் மஜீத்

-எம்.வை.அமீர்- 

 

இளைஞர் பாராளமன்ற தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும் போட்டியிடவும்,  வாக்களிக்கவும் சம சந்தர்ப்பம் அளிக்கப்படுதல் வேண்டும் என கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

1(1)_Fotor
கடந்த அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இளைஞர் பாராளமன்றமானது வரவேற்கதக்க விடயமாகும் என்றும்  இளைஞர்களுக்கு தலைமைத்துவ ஆளுமையை வழங்கி அவர்களை நாட்டின் உயர்ந்த பிரஜைகளாக்கும் உன்னதமான குறிக்கோளை கொண்டதாகவே இவ் இளைஞர் பாராளமன்ற முறை அமையப்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

இம்முறையானது இளைஞர் கழகங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றும்  நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும் போட்டியிடவும் அதேபோன்று அனைத்து இளைஞர்களும் வாக்களித்து தெரிவு செய்யக்கூடிய முறையொன்றை அறிமுகம் செய்வது தொடர்பாக இளைஞர் விவகார ஆராய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இளைஞர் கழகங்களுக்கு மாத்திரம் சந்தர்பம் வழங்கியிருப்பதானது
பக்கசார்பு மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வழிவகுத்துள்ளது
மட்டுமன்றி பிரதேச செயலக அதிகாரிகளின் விருப்பு
வெறுப்புக்கும் இடமளிக்கப்படுள்ளது. எனவேநடைமுறையிலுள்ள இளைஞர் பாராளமன்ற தேர்தல் முறைக்கு
பதிலாக நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கும்
ஜனநாயக ரீதியான தேர்தல் முறைமையொன்றை இளைஞர்
விவகார அமைச்சு அறிமுகம் செய்வது மிக அவசியமானதாகும் என்றும் கேட்டுக்கொண்டார்.