நாம் நல்லாட்சியின் பங்காளர்கள் என்ற விடயத்தை நகைப்புக்குறிய ஒரு விடயமாக மாற்றி விடக் கூடாது!

 

புதிய தேர்தல் முறை ஒன்றுக்கு நாம் எமது அங்கத்தவர்களையும் அபேட்சகர்களையும் தயார் படுத்தவேண்டிய ஒரு நிலையில் இருக்கிறோம். பிரதேச வாதம், பிரமுகர்வாதம் போன்ற பல்வேறு தீய சக்திகளால் ஆளப்பட்டு வந்த நாம் அதிலிருந்து விடுபட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.

நாம் நல்லாட்சியின் பங்காளர்கள்  என்ற விடயத்தை நகைப்புக்குறிய ஒரு விடயமாக மாற்றி விடக் கூடாது. அடுத்த தேர்தலில் அதனை அர்த்தமுள்ள ஒன்றாக நாம் காட்ட முற்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரசின் வியூகத்தை சிலர் தவறாக புரிந்துள்ளதால் குறிப்பாக சில அமைச்சர்கள் அதற்கு தவறான கருத்துக்களைக் கூறுவதால் சில சமயங்களில் பல்வேறு புரளிகள் ஏற்படுகின்றன என தெரிவித்தார்.

முஸ்லிம காங்கிரசின் 26 வது தேசிய மகாநாட்டில்  வருடாந்த அறிக்கையை சமர்பித்து செயலாளர் நாயகம் எம்.ரி .ஹசன் அலி உரையாற்றும் போது   இவ்வாறு தெரிவித்தார்  .

 

image1_Fotor

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26ஆவது பேராளர் மாநாடு  கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் நடைபெற்றது.

இம் மாநாட்டில், கட்சியின். தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசனலி உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

image2_Fotor