உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது!

 

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் அதிகரித்துள்ள இறக்குமதி வரி தொடர்ந்தும் அமுலில் உள்ளமையே இதற்கான காரணமாகும்.

உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்கம் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை 20 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரியை 40 ரூபாவினாலும் அதிகரித்தது.

Unknown

அறுவடை ஆரம்பத்தின் போது 80 ரூபாவிற்கும் 100 ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகையில் காணப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 150 ரூபாவிற்கும் 180 ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகையில் விற்கப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தி தற்போது முடிவடைந்துள்ள போதிலும், இறக்குமதி வரி தொடர்ந்தும் அமுலில் உள்ளமையினால் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழக்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றின் விலை சந்தையில் வெகுவாக அதிகரித்துள்ளது.