நாடாளுமன்றில் பிரதமர் பேசும் போது ஒலிவாங்கி முடக்கம் !

Ranil1

 பேசிக்கொண்டிருக்கும்போது தமது ஒலிவாங்கி நிறுத்தப்பட்டமை தொடர்பில் விசாரித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

நேற்றையதினம் பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் டலஸ் அழகப்பெரும மலையக நெடுஞ்சாலை தொடர்பில் கேள்வியொன்றை எழுப்பினார்.

இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துக் கொண்டிருந்தார். இதன்போது இரு தரப்புக்கும் இடையில் கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது. இதில் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது டலஸ் அழகப்பெரும குறுக்கிடவே பிரதமரின் ஒலிவாங்கி இடைநிறுத்தப்பட்டது.

தனது ஒலிவாங்கியை முடக்குவதற்கான பட்டனை பிரதமர் அழுத்தியதுடன், ஒலிவாங்கியைத் தருமாறும் கோரினார். பிரதமரின் கோரிக்கையைத் தொடர்ந்து, சபாநாயகர் பிரதமருக்கு ஒலிவாங்கியை வழங்குமாறு உத்தரவிட்டார்.

இருந்தாலும் டலஸ் அழகப்பெருமவின் ஒலிவாங்கியே முடுக்கிவிடப்பட்டது. பின்னரே பிரதமரின் ஒலிவாங்கி முடுக்கி விடப்பட்டது.

தான் பேசிக்கொண்டிருக்கும்போது தனது ஒலிவாங்கி இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் அதுபற்றி விசாரித்து அறிக்கையொன்றை வழங்குமாறு பாராளுமன்ற சபாநாயகரிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார்.