எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் (9 ஆம் திகதி) திங்கட்கிழமை விசேட அமைச்சரவை கூட்டமொன்றை கூட்டியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எவன் கார்ட் விவகாரத்தை மூடி மறைக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரிய அழுத்தம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் இந்த மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசியல் ரீதியில் பாரதூரமான முடிவு எடுக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.
எவன் கார்ட் மோசடியில் அமைச்சர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டிய அமைச்சர் ராஜித சேனா ரத்ன, இந்த விவகாரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் நியாயமாக நடப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு
நேற்று அரசாங்க தகவல் திணைக்க ளத்தில் நடைபெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் நேற்று நடந்த ஆளும் தரப்பு பாராளு மன்ற குழுக்கூட்டத்திலும் எவன் கார்ட் விவகாரம் சூடிபிடித்துள்ளது.
அநேகமான அமைச்சர்கள் எம்.பிக்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருப்பதாக அமைச்சர் கூறினார். மோச டியை ஒழிக்கவே மக்கள் நல்லாட்சி அர சாங்கமொன்றை ஆட்சியில் அமர்த்தி யதாகவும் எவன் கார்ட் விவகாரத்தை மறைக்க பணம் பெற்றவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசேட அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்த இருப்பதாகவும் அவர் குறிப் பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரி வித்த அமைச்சர் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாக் கப்பட்ட தேசிய நிறைவேற்று சபை கூட் டத்தில் எவன் கார்ட் விவகாரம் ஆரா யப்பட்டது. நான் அநுரகுமார, சம்பிக ரணவக்க ஆகியோர் எது குறித்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளிடம் வினவினோம். கோட்டாபயவை வியாழக் கிழமை கைது செய்யப்போவதாக அவர் கள் செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் தெரிவித்தனர். அடுத்த செவ்வாய் ஆகியும் அவர் கைதாகவில்லை. அடுத்த கூட்டத் தில் விசாரித்த போது இந்த விவகாரம் குறித்த தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்க வில்லை எனவும் அது கிடைத்ததும் கைதுசெய்வதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த வாரம் கூடும் வரை கோத்தாபய கைதாகவில்லை. மீண்டும் தேசிய நிறை வேற்று சபை கூடிய போது இது குற்ற வியல்சார் குற்றமல்ல. சிவில் குற்றம் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.
அமைச்சர் ஒருவரின் அழுத் தம் காரணமாகவே இவ்வாறு பின்வாங் கியதாக அவர்கள் கூறியிருந்தனர். தேசிய நிறைவேற்று சபையில் பேசப்பட்டவை தொடர்பில் முழு ஆதாரமும் இருக்கிறது. சேறுபூசுவதற்காக ஆதரமின்றி எந்த குற்றச்சாட்டும் நாம் தெரிவிக்கவில்லை.
சட்டமா அதிபர் திணைக்கத்திற்கு உதவுவதற்காக பிரதமர் இரு அமைச்சர்க ளுக்கு பொறுப்பு வழங்கியிருந்தார். அதில் ஒருவர் எவன் கார்ட் வழக்கில் ஆஜரானவராகும். சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி இதனை எதிர்க்க வேண்டாம் என அவர் கூறி யிருக்கிறார். இதற்கு ஆதாரம் இருக்கிறது.
எவன்கார்ட் பிரதானி நிஷ்சங்க சேனாதி பதியை நான் ஒருநாளும் சந்தித்தது கிடையாது. கொழும்பு கோல்ட் சென் டர் ஆரம்பிக்கும் நிகழ்விலே இவரை முதலில் கண்டேன்.
இவர் ஜானதிபதியை சந்தித்ததாக அனுரகுமார திசாநாயக்க குற்றஞ்சாட்டி யிருந்தார். ஆனால் அதனை ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார். ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பின்னர் மறுநாள் அவரை பாராட்ட வந்த ஆயிரத்திற்கும் அதிக மானவர்களிடையே இவரும் இருந்ததாக அநுரகுமார கூறியிருக்கிறார்.
அது குறித்து அவரிடம் ஜனாதிபதி வினவியுள்ளார்.
நேற்று நடந்த பாராளுமன்ற குழுக் கூட்டத்திலும் அர்ஜுன ரணதுங்க, சம்பிக ரணவக்க, அஜித் பி பெரேரா போன்றோர் எவன் கார்ட் விவகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
இந்த நிலையிலே விசேட அமைச்சரவை கூட்டமொன்றை நடத்தி எவன் கார்ட் விவகாரம் குறித்து ஆராய ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
அமைச்சரவையில் பேசப்படாத விடயங் களை இரு அமைச்சர்கள் பாராளுமன்றத் தில் பேசியது குறித்தும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் பேசினார். அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு எப்படி கம்பனியொன்று சார்பில் பாராளுமன் றத்தில் பேச முடியும்.
6 ஆயுதம் வழங்கியது தொடர்பில் பிள் ளையான் தடுப்புக் காவலில் இருக்கிறார். 3400 ஆயுதங்கள் வழங்கியவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
எவன் கார்ட் குறித்த விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளது. எனவே சம்பந் தப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் முடிவு எடுப்பர் என நம்புகி றோம்.
இன்றேல் அரசியல் ரீதியில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டி நேரிடும். சட்டமா அதிபர் திணைக்களம் இன்று பலராலும் விமர்சிக்கப்படுகிறது. எவன் கார்ட் விவகாரத்தில் அரசாங்கம் தலை யிடாது மெளனம் சாதிக்காது ஜனாதிபதி மற்றும் பிரதமர் குறித்து எமக்கு நம்பிக் கையிருக்கிறது.
எவன் கார்ட்டுடன் தொடர்புள்ள சம்பவங்களில் பொலிஸாருக்கு எதுவித உத்தரவும் வழங்கக் கூடாது என அமைச் சர் திலக் மாரப்பனவுக்கு பிரதமர் ஏற்கெ னவே அறிவித்திருந்தார். எவன் கார்ட் தொடர்பான பல ஆவணங்கள் மாற்றப் பட்டிருப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அமைச்சரவையில் அறிவித்திருந் தார். அபாயகர ஒளடத அதிகார சபை தலைவரும் அமைச்சர் ஒருவரின் தலையீட் டினாலே மாற்றப்பட்டுள்ளார்.
எவன் கார்ட் விவகாரத்தினால் அரசாங்கம் உடையாது. இந்த அரசாங் கம் 5 வருடங்கள் நீடிக்கும்.