நாளை சனிக்கிழமை நடக்கவிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டை முன்னிட்டு இன்று (வெள்ளிக் கிழமை ) இரவு கண்டி ஓக்ரே ஹோட்டலில் நடைபெற்ற கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினர் கூட்டத்தின்போது தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் ‘மரம்’ என்ற பெயரில் மாதம் இரு முறை வெளிவரும் பத்திரிகை ஒன்றும் வெளியிட்டு வைக்ப்பட்டது.
இந்த அதியுர் பீடக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் , செயலாளர் நாயகம் ஹசன் அலி , தவிசாளர் பஷீர் சேகு தாவூத் , கட்சியின் நாடாளுமன்ற , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதியுயர் பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர் .