ஐக்கிய நாடுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஊர்வலம்!

 

[t;gh;fhd;-

கழிவுகளை முறையற்ற முறையில் வீசுவதற்கு எதிரான மற்றும் அன்றாட கழிவுகளை முகாமைத்துவம் செய்வது பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்  மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

b_Fotor

ஐக்கிய நாடுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கழிவு முகாமைத்துவத்தை மட்டக்களப்பில் பேணுவது பற்றிய இவ் ஊர்வலம் மட்டக்களப்பு டேபா மண்டபத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் நகர மணிக்கூட்டுக் கோபுரத்தனூடாக பஸ் நிலையத்தையடைந்தது.

அபிவிருத்திக்கான ஒன்றிணைவு , பொறுப்புள்ள இலங்கையர்களாவோம் எனும் தொனிப்பொருளில் கழிவுகளை வீசாமல் கூடைகளில் கேரிப்போம் எனப் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் பிரையாணிகளின் பேரூந்துகள் மற்றும் வாகனங்களில் ஒட்டப்பட்டன.

e_Fotor

இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.