மோடியின் இங்கிலாந்து பயணத்தின் போது மூடிஸ் நிறுவனத்தின் எச்சரிக்கை பற்றி பேசப்படும் !

modi

 பிரதமர் மோடி அடுத்த வாரம் 3 நாள் பயணமாக இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அந்த பயணத்தின் போது சமீபத்தில் வெளியான மூடிஸ் நிறுவனத்தின் எச்சரிக்கை பற்றி பேசப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் பன்னாட்டு நிறுவனமான மூடிஸ் அனலைடிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு கூட நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.,வுக்கு பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசை கடுமையாக எதிர்த்து வருகின்றன. பா.ஜ.க உறுப்பினர்களின் கருத்துகளை மோடி கண்டு கொள்வது இல்லை.

நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக பல தாக்குதல்கள் நடந்து வருகிறது. வன்முறை அதிகரித்து வருவதால் ராஜ்யசபாவில் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அதிகரிக்கத்தான் செய்யும். மோடி பா.ஜ.க உறுப்பினர்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவருடைய நம்பகத்தன்மையை இழந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த அறிக்கை நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியது.

இந்நிலையில் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் பிலிப் ஹேமண்ட் பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணத்தின் போது மூடிஸ் நிறுவனத்தின் எச்சரிக்கை பற்றி பேசப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், மோடியிடம் இது பற்றி சில கேள்விகளை எழுப்புவார் என்று கூறியுள்ளார்.