நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் !

பி.எம்.எம்.ஏ.காதர்

 

 அம்பாறை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடனும்,நீலாவணை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பங்குபற்றுதலுடனும் மருதமுனை நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சேவைச் சங்கம் முன்னெடுத்து வரும் நன்நீPர் மீன் வளர்ப்புத் திட்டத்தில் மருதமுனை கரச்சைக் குளத்தில் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வு இன்று காலை(05-11-2015)ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில்; பிரதம அதிதியாகக் கலந்து கொண்;ட கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி மீன் குங்சுகளை குளத்தில் விட்டு இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் :- நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் நல்ல வருமானத்தைத் தரக்கூடிய சிறுகைத்தொழில் திட்டமாகும் இதை ஒழுங்காகச் செயவதன் மூலம் நல்ல பயனை அடைய முடியும்.

1-PMMA CADER-04-11-2015_Fotor
மேலும் இப்பிரதேசத்தின் நன்னீர் மீன் தேவையையும் ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் சுறுசுறுப்பாக இயங்கினால் எதிர்காலத்தில் இத்திட்டத்தை விருத்தி செய்து இன்னும் பலர் நன்மையடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்றார்.

2-PMMA CADER-05-11-2015_Fotor
இங்கு அம்பாறை மாவட்ட நீரியல் வள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.எம்.இம்தியாஸ்,கல்முனை பிரதேச செயலக திவிநெகும திட்ட முகாமையாளர்; ஏ.சிஅன்வர்,கல்முனை பிரதேச செயலாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா ,சிரேஷ்;ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாயுதீன்,பொறியிலாளர் எம்.எம்.எம்.சபீக் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பதினாறாயிரம் பல் வகை மீன் குஞ்சுகள் அதிதிகளால் குளத்தில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.