முஸ்த்தக்கிம் அவர்களை ஆதரிப்பது பொத்துவில் தொகுதி இளைஞர்களின் கடமை!

எம்.ஏ.தாஜகான்

பொத்துவில் பிரதேசத்தின் ஆளுமையுள்ள இளைஞர் ஆர். முஸ்த்தக்கிம்  அவர்களை ஆதரிப்பது பொத்துவில் தொகுதி இளைஞர்களின் கடமையாகும் என முன்னாள் பொத்துவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எல். இல்முதின் இன்று(5)தெரிவித்தார். 

IMG-20151103-WA0004_Fotor

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

பொத்துவில் எந்தவொரு பாராளுமன்ற, மாகாணசபை பிரதிநிதிகள் இன்றி துயருறும் இத்தறுவாயில் இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதியையாவது பெற்றுக்கொள்வதற்க்கு ஏனைய ஊர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். மேலும் பொத்துவிலின் இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர் ஆர். முஸ்தகிம் அவர்களை பொத்துவிலில் காணப்படும் 28 கழகங்களில் 18 கழகங்கள் ஆதரிக்க முன்வந்துள்ளமை பெரிதும் வரவேற்க்கத்தக்க விடயமாகும்.