முன்னைய ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பச்சையாகக் கொல்லப்பட்ட மையை மனதில் கொள்ள வேண்டும் : பிரதமர் !

Ranil-18 

 பாராளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் பொலிஸார் அழைக்கப்பட்டமை தொடர்பில் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சியினர், முன்னைய ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பச்சையாகக் கொல்லப்பட்ட மையை மனதில் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் பாதுகாப்புத் தரப்பினர் அழைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்.பி எழுப்பிய கேள்விக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளித்தார். இதன் பின்னர் கருத்து வெளியிட்டபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

சபாநாயகர் தனது முடிவை அறிவித்த பின்னர், ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதால் பொலிஸாருக்கு யாரும் கட்டளையிட முடியாது. அவர்கள் சுயாதீனமாக செயற் படுவதாகக் கூறினார். 19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதால், கடந்த காலத்தைப் போன்று பொலிஸார் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப் படுவதில்லையென்றும் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்றங்கள் குறித்த விடயங்களையே கையாள்கிறது. பொலி ஸாருக்கு கட்டளை வழங்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கே இருப்பதாகத் தெரிவித்தார். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப் பினரை பாராளுமன்ற வளாகத்துக்கு மேலதிக பாதுகாப்புக்கு அழைக்கும்போது சபாநாயகரின் அனுமதியைப் பெறுவது அவசியம். அதேநேரம், பொலிஸாரையோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரையோ கடமைக்கு அழைக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

அதேநேரம், பாராளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் பாதுகாப்புத் தரப் பினர் அழைக்கப்பட்டமை தொடர்பில் பிரச்சினையை எழுப்பும் எதிர்க்கட்சியினர், அவர்களுடைய ஆட்சியில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பச்சையாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. பாராளுமன்றத்தின் பாது காப்புப் பற்றி அவர்கள் கேள்வியெழுப் பினால், கொல்லப்பட்ட எம்பிக்களின் படுகொலைகள் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியமானது என்றும் கூறினார்.