-எம்.வை.அமீர்-
முதுபெரும் கல்விமானும் பன்னுலாசிரியரும்,சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களை நினைவு கூர்ந்து நினைவுப்பேருரைகளும் அன்னாரது பிரசவிப்புக்கள் அடங்கிய புத்தக கண்காட்சியும் அவரது நாட்டார் பாடல்கள் அடங்கிய இணையத்தள ஆரம்ப நிகழ்வும் 2015-11-04 ல் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களது மனைவி மகன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கல்வியலாளர்கள் அவரது நண்பர்கள் விசுவாசிகள் மாணவர்கள் என சபை நிறைந்திருந்த நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷேய்க் எஸ்.எம்.எம்.மசாகிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அறிஞர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் பற்றிய நினைவுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல்துறை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் ஆற்றினார். நிகழ்வு பற்றிய அறிமுக உரையை முதுநிலை விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் அவர்கள் நிகழ்த்தினர்.
ஆரம்ப நிகழ்வாக தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தில், மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் எழுதிய மற்றும் அவருடன் தொடர்புடைய நூல்கள் அடங்கிய கண்காட்சியை ஜெமீல் அவர்களது மகன் நஸீல் ஆரம்பித்து வைத்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தின் நூலகர் எம்.எம்.றிபாயுடீன் தலைமையில் மர்ஹும் ஜெமீல் அவர்களது நாட்டார் பாடல்கள் அடங்கிய இணையத்தளத்தை உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.