எதிர் கால முஸ்லிம்களின் தேசிய கட்சி ஒன்று சேருமா சுக்கு நூராகுமா……

 

நடந்து முடிந்த பாராளு மன்றத் தேர்தலில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் எதிர் கால  தேசிய கட்சி என்று   அழைக்கப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது நாடளாவிய ரீதியில் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டது என்பதை நாம் அறிந்ததே 

அக் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீன் அவர்கள் தேர்தலுக்கு முற்பாடே ஷீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில மாகண சபை உறுப்பினர்களை சில வாக்குறுதிகளை சமர்ப்பித்து தன் பக்கம் சாய்த்துக் கொண்டார் ஆனால் அந்த வாக்குறுதிகள் எதுவும் நடைமுறையில் சாத்தியப்படவில்லை ஏனெனில் அம்பாறை மாவட்டத்தில் அக்கட்சிக்கு ஒரு சீட்டும் கிடைக்கப்படவில்லை  மாறாக ஏமாற்றமே மித மிஞ்சிய நிலையில் இருந்தது அந்த வாக்குறுதிக்கு சொந்தக்காரார்களும் அம்பாறை மாவட்டத்தசை் சார்ந்தவர்களே என்பதும் வெளிப்படையான விடயமே ஆகும்  

இவ்வாறான ஒரு சூழ் நிலையில் அக்கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரும் செயலாளருமான வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களுக்கு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் ஆனால் அக் கட்சி அம்பாறை மாவட்டத்தின் வீழ்ச்சிக்கு அப்பால் அதனை அம்பாறை மாவட்டத்துக்கு கொடுக்க தயங்கியதன் விளைவு கட்சி இன்று இரு சாராராக பிரிவதற்கு வழிவகுத்து கொடுத்துள்ளது

இன்று இந்த பிரச்சினை நீதிமன்றம் செல்லும் அளவுக்கு சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று தலைவர் றிஷாத் பதியுதீனின் அணியினரும் செயலாளர் ஹமீட் அவர்களின் அணியினரும்  தேர்தல் ஆணையிளரிடம் முன் விசாரனை செய்யப்பட்டனர்

இதில் இரு அணியினரும் நேற்று காலை  தேர்தல் ஆணையாளரிடம் கட்சி யாருடையது  யாருக்கு இக்கட்சி சொந்தம் என்ற தீர்ப்புக்காக பல்வேறு வாதப்பிரதி வாதங்களை முன்வைத்தனர்

றிஸாட் பதியுதீன் தலைமையிலான அணியில் றிஸாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் இங்கு வருகை தந்திருந்தார்.
சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் தலைமையிலான அணியில் வை.எல்.எஸ்   ஹமீட்  மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும்   சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சருமான சுபைர் உற்பட இன்னும் சில முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கட்சியின் தலைவர்  றிஷாத் பதியுதீன்  அங்கு பேசு கையில் கட்சி  எனக்கே சொந்தம் கட்சியின்  சகல உரிமையும் அதிகாரமும் எனக்கே உண்டு ஒருவரை கட்சியில் இணைத்துக் கொள்வது  கட்சியில் இருந்து ஒருவரை நீக்குவது போன்ற அதிகாரம் எனக்குரியது எனவே இக்கட்சி எனக்குத்தான் சொந்தம் என்று றிஸாட் பதியுதீன் தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்தார்.

அதற்கு மாற்றுக்  கருத்து தெறிவித்த கட்சியின் செயலாளர்  ஹமீட் இக்கட்சியின்  யாப்பு தயாரித்தவனும் எழுதியவனும் நானே அத்துடன் கட்சியின் செயளாலரும் நானே செயளாலரை  எச்சந்தர்ப்பத்திலும் கட்சியில் இருந்து  யாராலும் நீக்க முடியாது என்றும் கட்சியும் கட்சியின் முழு அதிகாரமும் செயளாலருக்கே உரித்தானது என்று கட்சியின் யாப்பில் இத்தனையாவது இடத்தில் இந்த தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டினார்.

இருவரின் வாதப் பிரதிவாதங்களையும்  செவிதாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்த  தேர்தல் ஆணையாளர்  மஹிந்த தேசப்பிரிய கூறுகையில் கட்சியாப்புப் பற்றி அறியாமலா இதுவரை காலமும் அக் கட்சியில் இருந்தீர்கள் என்ற கேள்வியை அக்கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீனிடம் எழுப்பியுள்ளார் 

அதன் பிற்பாடு மேலும் அங்கு கருத்து தெறிவித்த தேர்தல் ஆணையாளர் 
நீங்கள் இருவரும் இணைந்து ஒரு முடிவுக்கு வந்தால் மாத்திரமே கட்சியில் நீங்கள் இருக்கலாம். அல்லது இருவரை விட்டும் கட்சி பரிபோய் தேர்தல் திணைக்களம் பாரமெடுக்கும் நிலை வருக் கூடும்  என்றார் எனவே இருவரும் பேசி ஒரு சுமுகமான தீர்வுக்கு வாருங்கள் என்று ஆலோசனை கூறி வழியனுப்பி வைக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து  எம்மால் அறிய முடிகிறது

உண்மையில் இப்பிரச்சினை ஆரம்பிப்பதற்கு  முக்கிய காரணம் தேசிய பட்டியலேயாகும் கடும் ஆர்வத்துடனும் பகல் கனவுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வை.எல்.எஸ்.ஹமீட் தலைவரினால் ஏமாற்றப்பட்டதாலயே இந்நிலைக்கு தள்ளப்பட்டார் என்பதை எம்மால் மறைமுகமாக அறியமுடிகிறது 

எது எவ்வாறாக இருந்தாலும் தலைவர் றிஷாத் கட்சியின் நலன் கருதியும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்காவும் செயலாளரை ஒன்று சேர்த்து கட்சியை வழி நடத்திச் செல்வாரா…?  அல்லது கட்சியை மேம் மேலும் சுக்கு நூராக்குவரா…? இதில் யார் கட்சியின் நலனுக்காக விட்டுக் கொடுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை