மாணவிகளிடம் தாய்மையா? வேலையா? என முடிவு செய்யச்சொல்லும் இங்கிலாந்து தலைமை ஆசிரியை !

cf9b1c1c-f2f7-43b0-9c73-6ed667eb61a2_S_secvpf

 இங்கிலாந்தின் லண்டன் நகரிலுள்ள பிரான்சிஸ் ஹோலாந்து என்ற தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் விவியன் டுர்ரம். இவர் தனது மாணவிகளிடம் தொழில், குடும்பம் இரண்டிலும் வெற்றியடைய முடியும் என தான் பொய்சொல்ல விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

இவற்றில் விரும்பும் ஏதேனும் ஒன்றை நோக்கி வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளுங்கள் என விவியன் குறிப்பிட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தாய்மையைத் தள்ளிவைத்து பணியை முதன்மையாகக் கருதி தலைமை ஆசிரியையாக முன்னேறியுள்ள விவியன், தொழிலில் முன்னேற எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் மாணவிகள் தாய்மையுடன் அதிலும் முன்னேற முடியும் என்று தவறாக வழிகாட்டப்படுகின்றனர்.

தாய்மையடைவதும், குழந்தை வளர்ப்பதும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக இருப்பதால், தொழிலில் முழு கவனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு தெரிவித்துள்ளதாக விவியன் குறிப்பிட்டுள்ளார்.

இவரது கருத்துக்கு பலதரப்பிலும் எதிர்ப்புகள் குவிந்துவரும் வேளையில், டுவிட்டர் பக்கத்தில் பெண்ணியத்தை வலியுறுத்தும் ஒரு பக்கத்தில், தனது மாணவர்களை ‘தந்தை ஸ்தானத்தை அடைவதற்காக தயார்படுத்தி வருகிறோம்’ என ஒரு பொதுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும் நாளுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.