அஸ்ரப் ஏ சமத்
முண்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 1977-1993 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுத்த உதா கம்மான மீள் எழுச்சிக் கிராமத்திட்டம நேற்று(31)ஆம் திகதி நாடு முழுவதிலும் 200 எழுச்சிக் கிரமாமங்கள் நிர்மாணப்பணிகள் வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் முதலாவது வீடமைப்புக் கிரமாம் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவினால் திஸ்ஸ மகாராமையில் பன்னகமுவையில் நேற்று சனிக்கிழமை(31)ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் வீடமைப்புத்திட்த்திற்கான அடிக்கல்லை நட்டு அங்கு உரையாற்றிய அமைச்சா் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில்
இந்த நாட்டில் வீடில்லாமல் 15 இலட்சம் மக்கள் உள்ளனா். அதற்காக கிரமாமிய மட்டத்தில் தனது தந்தை முன்எடுத்த கம் உதாவ மீள் எழுச்சிக் கிரமங்கள் திட்டத்தினை அவரது அடிச்சுவட்டை பின்பற்றி இன்று முதல் மீள ஆரம்பித்துள்ளேன். கடந்த காலங்களில் ்தனது தந்தை 1இலட்டசம் 10, 15 இலட்சம் வீடுகள் நிர்மாணித்து குறிப்பிட்ட காலத்திற்குள் பூரணப்படுத்தினாா் அன்று ஒரு வீட்டுக்கு 10ஆயிரம், 25ஆயிரம் ருபா கடன் கொடுத்து மக்கள் பங்களிப்போடு வீடுகளை நிர்மாணித்தாா். அதற்கமைவாக நானும்தற்பொழுது 2இலட்சத்து 50ஆயிரம் ருபாவை வீடமைப்பு கடனாக வழங்கி இவ் வீடமைப்புத்திட்டங்களை மீள ஆரம்பித்துள்ளேன்.
இதற்காக அரச காணிகள் 25 குடும்பங்களுக்கு பிரதேச செயலாளரினால் தெரிபு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் இலவசமாக காணிகள் வழங்கப்ட்டு இவ் வீடமைப்புத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. வீடுகளை நிர்மாணிக்க வென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 2இலட்சத்து 50ஆயிரம் ருபாவை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கட்டம் கட்டமாக வழங்குகின்றது. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தாின் மேற்பாா்வையின் கீழ் இவ் வீடமைப்புக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும். இந்த வீடமைப்புக் கடனை 3.5 வட்டி வீதத்தில் அதிகார சபைக்கு மீள செலுத்தல் வேண்டும். அத்துடன் மக்கள் பங்களிப்போடு இவ் வீடமைப்புத்திட்டம் நிர்மாணிக்கப்படுகின்றது. அத்துடன் நீர் மிண்சாரம் பாதை போன்ற சகல அடிப்படை வசதிகளும் இக் கிராமங்களுக்கு வழங்கப்படும். டிசம்பா் 31ஆம் திகதிக்குள் 38 எழுச்சிக் கிரமாங்கள் துரிதமாக முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும். இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக அரசாங்கம் 250 மில்லியன் ருபாவை இந்த வருடத்திற்குள் செயல்படுத்துவதற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடக இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அமுல்படுத்த அரச காணிகள் அந்தப் பிரதேச த்தில் இருத்தல் வேண்டும். அதனை தெரிபு செய்து பிரதேச செயலாளா் வீடடற்ற குடும்பங்களை இனம் கண்டு அவா்களை தெரிபு செய்தல் வேண்டும். என அமைச்சா் சஜித் இங்கு உரையாற்றினாா்