224 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம், நடுவானில் நொறுங்கி விபத்திற்குள்ளானதாக எகிப்து உறுதிப்படுத்தியுள்ளது.
எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சேர்த்து 224 பேருடன் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு குறித்த பயணிகள் விமானம் சென்றுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ரேடார் உடனான துண்டிப்பை இழந்தது. பின் சினாய் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்தது தெரியவந்தது.
விபத்து குறித்து மேலும் விபரங்களை சேகரிப்பதற்காக எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில், அமைச்சரவை குழு ஒன்றை அமைத்துள்ளார் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.