பாட­சாலை மட்­டத்­தி­லி­ருந்­துதான் தேசியக் கிரிக்கெட் அணிக்­கான வீரர்­களை நாம் தேட­வேண்டும் – மஹேல ஜய­வர்­தன!

Sri Lankan Arrival Media Conference

 கிரிக்­கெட்டின் நிர்­வாகம் மாறலாம். ஆனால் கிரிக்­கெட்டின் கட்­ட­மைப்பு மாறக்­கூ­டாது. இது சாதா­ர­ண­மா­காது. சாதர­ணப்­ப­டுத்­தவும் முடி­யாது என்று தெரி­வித்தார் மஹேல ஜய­வர்­தன. 

பாட­சாலை மட்­டத்­தி­லி­ருந்­துதான் தேசியக் கிரிக்கெட் அணிக்­கான வீரர்­களை நாம் தேட­வேண்டும். அதனால் பாட­சாலை மட்­டத்­தி­லேயே கிரிக்­கெட்டை வளர்த்­தெ­டுக்­க­வேண்டும். இதுதான் நமக்­கான இன்­றைய தேவை­யாக இருக்­கி­றது என்றும் மஹேல குறிப்­பிட்டார். நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே மஹேல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 அவர் மேலும் பேசு­கையில், பாட­சாலை மட்­டத் தி­லான கிரிக்கெட்டை ஊக்குவிக்க நான் ஒரு திட்டத்தை கொடுத்துள் ளேன். அதன்படி செயற் பட்டால் நமக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதிலிருந்து தேசிய அணிக்கான வீரர்க ளையும் நாம் இனங்கண்டு கொள்ளலாம் என்று மஹேல தெரிவித்தார்