சட்ட மூலங்களில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டார் !

Karu Jayasuriya_2

எட்டாவது பாராளுமன்றதில் நிறைவேற்றப்பட்டுள்ள, தேசிய வறுமான வரி திருத்த சட்டமூலம், தேசத்தை கட்டியெழுப்பும் வரி திருத்த சட்ட மூலம் மற்றும் பொருளாதார சேவைகள் வரி திருத்த சட்ட மூலம் உள்ளிட்ட ஆறு சட்ட மூலங்களில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். 

இன்று காலை இவர் குறித்த சட்டமூலங்களில் கையெழுத்திட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை சபாநாயகராக பொறுப்பேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமூலத்தில் கரு ஜெயசூரிய கையெழுத்திடுவது இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.