கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன், தேர்தலில் போட்டியிட்டால் அவரை வெற்றியீட்ட வைப்பதா? இல்லையா? என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பிரதேசத்தில் போபத்தலாவ, மெனிக்பாலம மற்றும் கொட்டகலை ரொசிட்டா, போன்ற இடங்களில் உள்ள கால்நடை வளர்ப்பு பண்ணைகளுக்கு இன்று அமைச்சர் விஜயம் செய்தார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கருணா அம்மான் வடக்கில் தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது எமக்குப் பிரச்சினையில்லை. எனினும் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல உரிமையும் அவருக்கு உள்ளது.
எவ்வாறாயினும் அவர் வடக்கில் தேர்தலில் போட்டியிட்டால் அவரை வெற்றியீட்ட வைப்பதா? அல்லது தோல்வியடையச் செய்வதா? என்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.