உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தலை வெற்­றி­கொள்­வ­தற்கு ஸ்ரீ. சு. கட்­சிக்கு தலைமை தாங்கி உழைப்பேன் !

 

எதி­ர்வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தலை வெற்­றி­கொள்­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு தலைமை தாங்கி உழைப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ரணில் விக்­கிர­ம­சிங்க தலைமை தாங்கும் போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு நான் தலைமை தாங்­கு­வதில் எங்­க­ளுக்குள் எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது எனவும் கூறினார்.

கடு­வ­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி காரி­யா­லயம் ஒன்­றை ­நேற்று மாலை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது­தொ­டர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஸ்ரீல.சு.கட்சி வெற்றி பெற­வேண்டும். அதற்­காக கட்­சிக்கு தலைமை தாங்கி செயற்­ப­டுவேன். சு.க.தோல்­வி­ய­டை­வதை நான் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டேன்.

கடந்த இரண்டு தேர்­தல்­க­ளிலும் எமது கட்சி தோல்­வி­யுற்­றதை ஏற்­றுக்­கொள்­வ­துடன் அதற்­கான கார­ணத்தை கண்­ட­றிந்து கட்­சியை வெற்­றிப்­பா­தைக்கு கொண்­டு­செல்­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்ள வேண்டும்.

மேலும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நல்­லாட்சி வெற்­றி­ பெ­ற­வேண்­டு­மென்றால் சர்­வ­கட்சி முறைமை செயற்­ப­ட­வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். அத்­துடன் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் தனி­ந­பர்­களை குற்றம் சுமத்­து­வ­தற்கு பதி­லாக வெற்­றி­பெற்ற ஜன­நா­யக நாடொன்றில் இடம்­பெறும் கொள்கை தொடர்பில் கலந்­து­ரை­யாடல் இடம்­பெ­ற­வேண்டும் என்­ப­துடன் ஊழல் மோசடி மற்றும் வீண்­வி­ர­ய­மற்ற உறு­தி­மிக்க மக்கள் தொடர்­பா­ட­லொன்­றை மேற்­கொள்ளும் பிர­தி­நி­தி­க­ளையே மக்கள் தேர்­ந் தெ­டுக்க வேண்டும்.

மேலும் அடுத்­து­வரும் இரண்டு மாதங்களுக்குள் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.அத்துடன் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொகுதி வாரியாகவே நடைபெறும் என்றார்.