பாரூக் சிஹான்
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்தை மிகவும் சிறப்பாக வழங்கும் நோக்கில் – யாழ்ப்பாணத்தில் விசேட ஒன்றுகூடல்
வடக்கு மாகாண மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கோடு வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஏற்க்கனவே ஐந்து மாவட்டங்களுக்கும் நேர சூசிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 29-10-2015 வியாழன் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வடக்கு மாகாணத்தின் அனைத்து தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினர் ஆகியோருக்கான விசேட ஒன்று கூடல் இடம்பெற்றது.
இதில் 60:40 என்னும் அடிப்படையில் நேர சூசிகளை அமைத்து எதிர்வரும் 01-11-2015 முதல் நடைமுறை படுத்தும் நோக்கோடு கலந்துரையாடப்பட்டது. இவ் ஒன்றுகூடலுக்கு வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் மற்றும் ஐந்து மாவட்ட செயலகங்களின் கணக்காளர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளர் மற்றும் வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வடக்கு இணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.