ஹம்பாந்தோட்டையில் பல்லிமல்ல சந்தியில் கடந்த ஒக்டோபா் 12ஆம் திகதி சுத்தமான குடிநீா் பெற்றுத் தருமாரு ஹம்பாந்தோட்டையில் உள்ள சில எதிா்கட்சி அரசியல் வாதிகள் அரசியல் லாபம் கருதி மக்களை ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்தினாா்கள் . இம் மக்களின் குடி நீா்த்திட்டத்திற்காக ஏற்கனவே என்னால் சமா்ப்பிக்கப்பட்ட அமைச்ரவைப் பத்திரத்தில் 2149 லச்சம் ருபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா்.
இன்று (29) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே அமைச்சா் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இக் மக்களின் சுத்தமான குடிநிா்த்திட்டத்திற்காக என்னால் ஏற்கனவே உரிய அமைச்சரவை பத்திரம் சமா்ப்பித்து 2149 இலட்சம் ருபா நிதி வேண்டி கடந்த ஒக்டோபா் 14ஆம் திகதி அமைச்சரவைக்கு சமா்ப்பித்திருந்தேன். அதனை ஜனாதிபதி ,பிரதமா் உட்பட அமைச்சரவை அதனை அங்கிகரித்தனா் ஆனால் . . ஹம்பாந்தோட்டையில் உள்ள சில எதிா்க்கட்சி அரசியல்வாதிகள் எதிா்காலத்தில் உள்ளுராட்சி தோ்தலை மையமாக வைத்து தமது அரசியல் லாபதத்திற்காக மக்களை ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுத்தினாா்கள். இத்திட்டத்திற்காக நான் சமா்ப்பித்த அமைச்சரவைப் பததிரம் அனுமதிக்கப்பட்டு நீர் விநியோக வடிகாலமைப்புச் சபை இத்திட்டத்தினை முன்னெடுத்து செல்ல உள்ளது. இதனை அறிந்து கொண்ட அவா்கள் மக்களை ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்துகின்றனா்.