உலகின் தலைசிறந்த மனிதர்களில் மோடி 10வது இடம் !

 

உலக பொருளாதார மன்றம் உலகின் தலைசிறந்த மனிதர்கள் குறித்து நடத்திய கருத்துக்கணிப்பில், மகாத்மா காந்தி 4 ஆவது இடத்தையும், பிரதமர் மோடி 10 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

modi

 

உலகின் தலைசிறந்த மனிதர்கள் குறித்து, உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில், உலகின் 125 நாடுகளிலிருந்து, 20-30 வயதுக்கு உட்பட்ட 1,084 இளைஞர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில், 20.1 % வாக்குகளுடன் மறைந்த தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா முதலிடத்தை பிடித்துள்ளார். போப் பிரான்சிஸ் 2 ஆம் இடத்தையும், மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 5 ஆம் இடத்தையும், அமெரிக்க அதிபர் ஒபாமா 7 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

 

கருத்துக்கணிப்பில் 12.4 % வாக்குகளைப் பெற்று, மகாத்மா காந்தியடிகள் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 3 % வாக்குளை பெற்று, 10வது இடத்தை பிடித்துள்ளார்.