அபு அலா –
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள மழையால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சில கிராமங்கள் வெள்ள நீரினால் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து பாரிய முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் இன்று காலை (28) நேரில் சென்று பார்வையிட்டார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை வடிந்தோடுவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் மிக அவசரமாக முன்னெடுக்கும்படி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு கிழக்கு மாகாண அமைச்சர் விடுத்த கோரிக்கையடுத்து இந்த வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை கிழக்கு மாகாண சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வடிகான்களை துப்பரவு செய்யும் பணியினை இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.