அபு அலா –
பௌர்னமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற விஷேட சர்வமத பூஜை வழிபாடுகளின் பின்னர் மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் விஷேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்கிழமை (27) இடம்பெற்றது.
மரியாள் பேராலய ஆயர் பொன்னய்யா யோசப் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்டின் பெணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், வட மத்திய மாகாண முதலமைச்சர் சொய்சா ஜெயரத்தன, கிழக்கு மாகாண சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் பலர் இதில் பங்குபற்றினர்.
இதன்போது, மரியாள் பேராலயம் ஆயர் பொன்னய்யா யோசப் மற்றும் அருட் தந்தை ஆகியோரினால் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மாணவர்களுக்கான விஷேட வகுப்பு மற்றும் பரீட்சைகள் போன்றவற்றை இடம்பெறாத வகையில் ஏற்பாடுகளை செய்து தருமாறும் இத்தினத்தில் நடைபெறுகின்ற கல்வி தொடர்பான அனைத்து விடயங்களையும் வேறு தினத்தில் நடாத்துமாறும் கோரிக்கை விடுக்கபட்டது.