எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக அட்டாளைச்சேனை பிரதேச சபை வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகளிலும், வெள்ள நீரை அகற்றும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றது.
பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.கலீல் றகுமான், நிதி உதவியாளர் ஏ.எம்.இர்பான் ஆகியோர் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நீரை அகற்றும் செயற்பாட்டை இன்று (2015-10-25) ஆரம்பித்து வைத்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள வடிகான்களை துபபுரவு செய்யும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக அதன் பணிகள் இடம்பெறும் என்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.எம்.கலீல் றகுமான் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் அட்டாளைச்சேனை,பாலமுனை,ஒலுவில், தீகவாபி,திராய்க்கேணி,ஆலம்குளம் ,தைக்காநகர்,அஸ்ரப்நகர்,சம்பு நகர்,மீலாத் நகர்,ஹிரா நகர் போன்ற கிராமங்கள் காணப்படுகின்றது. பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களைக் கொண்டு மக்களின் தேவைகளை அர்ப்பணிப்புடன் நிவைவேற்றி வருவதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.