இஸ்லாம் மார்க்கமா ? மதமா ?

posts-tagged-islam

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய நவீன உலகில் பல் வேறு மதத்தை பின்பற்றுகின்ற  பல தெய்வ வணக்க வழி  பாடுகளை கொண்ட மனிதர்கள்  வாழக் கூடியதை காண்கின்றோம் ஆனால் இஸ்லாத்தை பின்பற்றுகின்ற முஸ்லிம்களாகிய நாம் மாத்திரம் இஸ்லாத்தை  ஏன் மார்க்கம் என்று அழைக்கின்றோம் என்ற கேள்வி பிற அந்திய  மதத்தவர்களிடத்திலும் இஸ்லாத்தின் மகத்துவமும் தாத்பரியமும் அறியாத சில முஸ்லிம்களிடத்திலும் பரவலாக காணப்படுவதை அறிய முடிகிறது 

உண்மையில் இந்த கேள்விக்கான விடையை அறிவதற்கு முன் இஸ்லாம் என்றால் என்ன…?  அது யாரிடமிருந்து எமக்கு அருளப்பட்டது போன்ற வற்றை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்

இஸ்லாம் முழு மனித  சமூதாயத்தினதும் ஈருலக வெற்றிக்காக  இறைவனால் அனுப்பப் பட்ட உண்மையான மார்க்கமாகும்

கிறிஸ்தவ மதம் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் பௌத்த மதம்
மகான் புத்தரின் பெயராலும்  மார்க்ஸியம் கால்மார்க்ஸின்.பெயராலூம்  அழைக்கப்படுகின்றன ஹிந்து மதம் ஹி்ந்து சமூகத்தினது பெயராலும் யூத மதம் யூத சமூகத்தின் பெயராலும் நிலைக்கப் பெற்றுள்ளன

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தனிப்பட்ட ஒருவரது பெயருடனயோ ஒரு சமூகத்துடனோ தொடர்புடையதல்ல அது முழு மனித  சமூதயத்திற்கும் கிடைத்த இறைவனின் பேரருளாகும்

இஸ்லாம் என்ற பெயரே அதற்குச் சான்று
இஸ்லாம் என்றால் இறைவனுக்கு கட்டுப்படல் கீழ்ப் படிந்து நடத்தல் வணங்கி நடத்தல் என்பது பொருள் சாந்தி சமாதானம் எனவும் பொருளுன்டு அதாவது எவர் இறைவனுக்கு கீழ்ப்படிந்து அவன் கட்டளைகளை செவியேற்று வழி நடக்கின்றாரோ அவர் மத்தியில் சாந்தி சமாதானம் வரும் என்றும்  கூறலாம்

இஸ்லாத்தில் பல தெய்வ வணக்கம் சிலைகள் உயிரட்ட படங்கள் மரங்கள் நெருப்பு சூரியன் சந்திரன் மனிதர்கள் போன்ற வற்றின்  மீதான வணக்கம் இல்லை என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் இஸ்லாம் மனிதனின் இயற்கையான தனது அன்றாட தேவைகளை செய்வதற்கு மறுக்க வில்லை ஆண்கள் பெண்கள் என்ற பாகு பாடின்றி சம அந்தஸ்த்து கொடுக்கிறது மொழி சாதி இன நிற வர்க்க தேச ரீதியாக மனிதர்களை வேறு படுத்தி காட்டுவதை முற்றாக நிராகரிக்கின்றது

ஒன்றே குலம் – அது முழு மனித சமூதாயம்
ஒருவனே தேவன்- அவன் அல்லாஹ் ஒருவனே

என்ற கொள்கையை எள்ளளவும் பிழையின்றி பின்பற்றும் ஒரே மார்க்கம் என்றால்  இஸ்லாம் மட்டுமே அதனை  அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் நபி  (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வினால்  அருளப்பட்ட அல் குர் ஆன் வசனம் இவ்வாறு பறை சாற்றுகிறது

إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ

“திண்ணமாக இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்ட மார்க்கமாகும்”

( அல் குர் ஆன் 3:19 )

முஸ்லிம்களாகிய நாங்கள் ஏனைய மதத்தவர்கள் போன்று ஏன் மதம் என்று அழைக்காமல் மார்க்கம் என்று அழைக்கின்றோம் என்று பார்ப்போமேயானால் மார்க்கம் என்றால் பாதை வழி என்பது அர்த்தமாகும் உலகத்தில் நாம் வாழும் போது எந்த வழியில் சென்றால் ஈருலகிலும் வெற்றி பெறலாம் மற்றும் எமக்கு வருகின்ற பிரச்சினைகள் இடையூறுகள் அவற்றுக்கு எந்த வழியில் சென்றால் தீர்வு கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு விடையிருந்தால் அதனை மார்க்கம் என்று அழைக்கலாம் ஆகவேதான் அவ்வாறான கேள்விகளுக்கு இஸ்லாத்தில்  பதிலிருப்பதாலயே நாம் இஸ்லாத்தை  மார்க்கம் என்று அழைக்கின்றோம் 

இஸ்லாம் மார்க்கம் மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் மலஜலம் கழித்தல் முதல் கொண்டு மனைவியுடன் தாம்பத்தியம் மேற் கொள்வது வரை எவ்வாறு என்று தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளது மற்றும் 
அரசியல் பொருளாதாரம் குற்றவியல் சட்டங்கள் விசாரனைச் சட்டங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வும் வழி காட்டுதலும் உள்ளது 

உலகில் உள்ள ஏனைய மதங்கள்  தங்களுடைய கடவுளை வணங்கும் வழிபாட்டு முறைகளையும் பக்தர்களுடன் தொடர்புடைய சடங்குகளையுமே அநேகமாக கூறுகின்றன இதன் காரணமாகத்தான் இஸ்லாம் மார்க்கம் எனவும் ஏனயவை மதங்கள் எனவும் குறிப்பிடப் படுகி்ன்றன 

அதுமட்டு மன்றி மதம் என்ற வார்த்தையின் பொருள் வெறி என்பதையும் குறிக்கும் ஆகவேதான் ஈருலுக வெற்றிக்குமான உண்மையான மார்க்கத்தை நாம் மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்று அழைப்பதே சாலச் சிறந்தது என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள் 

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை