அபு அலா –
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் நடாத்திய பாரம்பரிய கலாசார விழா நேற்று மாலை (22) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கஸிதா, நாடகம், பொல்லடி, கோலாட்
இந்நிகழ்வின் பிரதம அதிதி அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர் மற்றும் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா மற்றும் உதவி செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் ஆகியோரினால் இதில் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.
இதில் அட்டாளைச்சேனை பிரதேச கணக்காளர், உதவி திட்டமிடல் அதிகாரி, கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப், காரியாலய உத்தியோகத்தர்கள், மற்றும் கிராம சேவகர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.