எஸ்.எம்.அறூஸ், நஜீப் இப்றாஹிம், ஏ.அர்சாத்
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு எதிராக பிழையான செய்திகளை சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் வெளியிட்டு அங்கு கடமையாற்றும் உத்தியோர்களின் நேர்மைத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்கு எதிராக உத்தியோகத்தர்களினால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியாவறு கோசங்களை எழுப்பினர்.
அண்மைக்காலமாக ஒரு சில இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரதேச சபையின் செயற்பாடுகளை பிழையான முறையில் மக்கள் மத்தியில் வெளிக்காட்டுவதற்கான பல செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களுக்காக அரப்பணிப்புடன் செயலாற்றும் பிரதேச சபையை ஊடகங்களில் பிழையாக சித்தரிக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களிலும் இவ்வாறாளன செய்திகளை பதிவேற்றம் செய்து அந்த செய்திகள் பொய்யானவை என்று நிருபீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தியோகத்தர்கள் பின்வரும் பதாகைகளை ஏந்தியவாறு கோசமிட்டனர். தனிப்பட்ட காரணங்களுக்காக அட்டாளைச்சேனை பிர தேச சபையை கொச்சைப்படுத்தாதே, ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்து, முறையான நிர்வாகத்தை களங்கப்படுத்தாதே, ஊடக தர்மத்தை நிலைநிறுத்து, ஊழியர்களை அச்சுறுத்தாதே போன்ற வாசகங்களை ஏந்தியவாறு காணப்பட்டனர்.
இங்கு பிரதேச சபையின் உத்தியோகத்தர் மௌலவி எம்.எச். றியால் கருத்தத் தெரிவிக்கும் போது, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயற்பாடுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. தனிப்பட்ட காரணங்களை வைத்து பிரதே சசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக இன்று சமூக வலைத்தனங்களிலும், இணையத்தளங்களிலும் பிழையான செய்திகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.
அர்ப்பணிப்புடன் மக்களுக்காக பணியாற்றும் உத்தியோகத்தர்கள்,ஊழியர்களின் நேர்மைத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பிழையானவர்களாகக் காட்டி அவர்களை மனஉலைச்சலுக்கு ஆட்படுத்த முதற்பட்டுள்ளனர்.
இவ்வாறான செ்யதிகள் வெளியிடப்பட்டதை பிரதேச சபை உத்தியோகத்தர்களான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுமாயின் சபை ஊழியர்கள் வேறு இடங்களிற்கு இடமாற்றமாகிச் செல்வதற்கான நிலை ஏற்படும்.
சபையைப்பற்றி ஏதாவது ஒரு பிழையான செய்தி கிடைக்கும் இடத்து அந்த செய்தியின் உண்மைத்தனமையை ஆராய்ந்து வெயியிட வேண்டும். தங்களது தளிப்பட்ட காரணங்களுக்காக செய்திகளை உருவாக்குவதை குறிப்பிட்ட நபர்கள் இனிமேலாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஊடகத்துறை மக்களுக்காகவே இயங்குகின்றது. ஒரு சிலரின் போக்கினால் அத்துறைக்கு களங்கம் ஏற்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.