அபு அலா –
சூடான லேசர் கதிர் மூலம் நுளம்புகளை அழிக்கும் உபகரணம் ஒன்றை அக்கரைப்பற்று முனவ்வறா ஜூனியர் கல்லூரி மாணவன் என்.ஜாஸிம் அத்னான் கண்டுபிடித்துள்ளார்.
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தினால் நடாத்தப்பட்ட புதிய கண்டு பிடிப்பாளர்களுக்கான போட்டியில் அக்கரைப்பற்று வலய முனவ்வறா ஜூனியர் கல்லூரி மாணவன் சூடான லேசர் கதிர் மூலம் நுளம்புகளை அழிக்கும் உபகரணம் ஒன்றை கண்டுபிடித்து தனது புதிய சாதனையைப் படைத்து வலயத்தில் 1வது இடத்தைப்பெற்றுள்ளார்.
அம்மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் ஏ.ஜீ.அன்வர் தலைமையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்நி கழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, பாடசாலை வலய பொறுப்பாசிரியர் எம்.எச்.ஹாறுன், எம்.பி.உவைஸ், மாணவனின் தந்தை டாக்டர் எம்.ஏ.நதீர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு அம்மாணவனை பாராட்டி பரிசில்களை வழங்கி கெளரவித்தனர்.