சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டும் நபர்களும் மாட்டு வண்டிகளும் கைபற்றப்பட்டுள்ளன !

அசாகிம் 

 

2_Fotor

வாழைச்சேனை வட்டார வன காரியால அதிகாரிகலால் தமது வன வளப்பிரிவில் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டும் நபர்களும் மாட்டு வண்டிகளும் மரங்களையும் அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன காரியலயத்தின் மேலதிக வன அதிகாரி எப்.எம்.ஷிபான் தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வடமுனை பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டுவதாக வாழைச்சேனை வட்டார வன காரியால அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த காட்டுப் பகுதியை சுற்றி வளைத்த போது சந்தேக நபர்கள் ஆறு பேரும் மரங்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் இயந்திர கைவால், சிறிய உழவு இயந்திரம் (லேன் மாஸ்டர்) 01, மாட்டு வண்டி 03, மாடுகள் ஆறு, முதுரை மரம் 02, வெள்ளை கருங்காலி மரம் 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

4_Fotor
சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் இவர்களில் மாட்டு வண்டியில் வந்த மூவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா வீதம் முப்பதாயிரம் ரூபாவும் சிறிய உழவு இயந்திரத்துடன் (லேன் மாஸ்டர்) கைதான மூன்று சந்தேக நபர்களுக்கும் தலா ஐயாயிரம் ரூபா வீதம் பதினையாயிரம் ரூபா தண்டப் பணமாக அறவிடப்பட்டதுடன் ஆறு பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதக வாழைச்சேனை வட்டார வன காரியலயத்தின் மேலதிக வன அதிகாரி மேலும் தெரிவித்தார்.

10_Fotor 129_Fotor