-எம்.வை.அமீர்-
இலத்திரனியல் கழிவுகளின் அபாயகர தன்மையும், அதிலிருந்து விடுபடுடகூடிய வழிகளும் எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று நிந்தவூர் 17ம் கிராம சேவகர் பிரிவில் திவிநெகும உத்தியோகத்தர் ஏ.எல்.எம். ஜெலீல் அவர்களின் தலைமையில் அவரது அலுவலகத்தில் 2015.04.29ம் திகதி அன்று ஒழங்கு செய்யப்பட்டிருந்த செயலமர்வுவில் கமு/கமு/ அல் – அஷ்றக் மத்திய மஹாவித்தியாலயம் (தேசிய பாடசாலை), நிந்தவூரில் கல்வி பயிலும் செல்வி. ஏ.எச். இன்பாசா ஹமீட், சுற்றாடல் முன்னோடி வளவாளராக கலந்துகொண்டு, வீடுகளில் சேரும் இலத்திரனியல் கழிவுகளின் அபாயகர தன்மையும், அதனால் ஏற்பட கூடிய பாதக விளைவுகளையும், நாம் அவ் ஆபத்தில் இருந்து விடுபடுவதற்கு எவ்வகையான வழிவகைகளை கையாள வேண்டும் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
நிகழ்வில் நிந்தவூர் 17ம் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் பயனாளிகள் அநேகர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.