பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போனமை பற்றி விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு !

வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் சுற்றிவளைப்புப் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் குணதிலக்க காணாமல் போனமை தொடர்பாக உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விசாரணைகளை முடித்து விரைவில் தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனிடம், ஜனாதிபதி அறிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Maithripala_Sirisena
கடந்த ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி தனது வீட்டுக்கு செல்வதாகக் கூறி பணியிடத்தில் இருந்து புறப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்து அதன் பின் எந்தத் தகவலும் இல்லை.

இந்தநிலையில் இவரைக் கண்டுபிடித்துத் தருமாறு பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி மற்றும் மகள் ஊடகங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதி பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போனமை குறித்து விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.