நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 12ம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சில நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பால் சென்று சந்தேகநபர்களுக்கு தண்டனை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட மனுவை விசாரணை செய்த போதே, உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
கொழும்பு – மொரவக மற்றும் தங்காலை நீதிமன்றங்களில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களுக்கு நான்கு வருடங்கள் தண்டனை வழங்கு வேண்டும் எனினும் சில சந்தர்ப்பங்களில் 34 மற்றும் 66 வருடங்கள் வரை தண்டனை வழங்குவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் நவம்பர் 12ம் திகதி தகவலளிக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.