போக்குவரத்து துறையின் பலவீனமான நிர்வாகம் காரணமாக வருடத்திற்கு 225 பில்லியன் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது அரசாங்கத்தில் நல்லாட்சி பொறிமுறை செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று நாரஹேன்பிடவில் இடம்பெற்ற ஒன்றிணைந்த போக்குவரத்து சங்கத்தின் ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு விஜயம் செய்து பார்வையிட்ட போதும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என, கெமுணு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.