கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தி நீர்கொழும்பு மேரிஸ் ஸ்ரெலா கல்லூரி சம்பியனானது !

ஏ.எஸ்.எம்.ஜாவித்

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் மாணவத் தலைவர்கள் சங்கத்தினால் 11வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு ஏழுபேர் கொண்ட ‘ஸாஹிரா சுப்பர் 16’கால்ப்பந்தாட்ட போட்டி இன்று (17) ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.
கலந்து கொண்ட 16 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு இடம் பெற்ற போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு நீர்கொழும்பு மேரிஸ் ஸ்ரெலா கல்லூரியும், கொழும்பு றோயல் கல்லூரியும் தெரிவு செய்யப்பட்ட போட்டியில் நீர்கொழும்பு மேரிஸ் ஸ்ரெலா கல்லூரி பெனால்டி அடிப்படையில் 3:2 என்ற கோல் கணக்கில் றோயல் கல்லூரி அணியை வென்று சம்பியனானது.

IMG_8840_Fotor
வெற்றி பெற்ற அணிக்கு தங்கப் பதக்கம் அணிவித்து வெற்றிக் கேடயம், சான்றிதழ்கள், ஐம்பதாயிரம் ரூபா பணப்பரிசில்களையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சமுகசேவையாளர் புரவலர் ஹாசிம் உமர் வழங்கி வைப்பதையும் அருகில் ஸாஹிராக் கல்லுரி அதிபர் றிஸ்வி மரிக்கார் உள்ளிட்ட பிரமுகர்களும் ஏற்பாட்டாளர்களும் காணப்படுகின்றனர்.

IMG_8849_Fotor
இரண்டாம் இடத்தைப் பெற்ற றோயல் கல்லூரி அணிக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்துடன் நாற்பதாயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் றோயல் கல்லூரி அணியின் சிறந்த வீரருக்கு பெறுமதிவாய்ந்த துவிச்சக்கர வண்டியும் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய ஏனைய அணிகளுக்கு பந்துகள் மற்றும் ரி சேர்ட்டுக்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_8861_Fotor
சம்பியன் பெற்ற அணி வீரர்கள்
சுபுன் பொன்சேகா, டிலிப் சுராஜ், கசுன் சண்டீப, தட்சர சசங்க, அஞ்ஜன குணவர்த்தன, முஹமட் இன்ஷாப், உமேஸ் சஞ்ஜய், அமித் பிரியங்கர, றிஷான், செஹான் பொன்சேகா, நிஷால் தரிண்டு, சார்ள்ஸ் குமார ஆகியோர் வெற்றி பெற்ற அணி வீரர்களாவர்.

IMG_8940_Fotor